வழியில் மயங்கி விழுந்த வர்த்தகர் – கண்டுகொள்ளாத மக்கள் – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பிரதான வீதி ஓரத்தில் நேற்றிரவு வர்த்தக தொழில் அதிபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.

இவர் மயங்கிக் கிடப்பதை மது மயக்கத்தில் இருப்பதாக கருதிய பாதசாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியே சென்ற இளைஞன் ஒருவர் இச்சம்பவத்தை கிளிநொச்சி பொலிஸ் தலைமையக பிரதான பரிசோதகரிடம் நேரில் சென்று தெரிவித்துள்ளார்.

இத்தகவல் அறிந்த பொலிஸ் தலைமை அதிகாரி சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிசார் இருவரை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் அங்கு சென்று அவதானிக்கும் போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவ்விடத்தில் குழுமினார்கள் அப்பொழுது குறித்த தொழில் அதிபர் யார் என்பதை அங்கு நின்ற சிலர் அடையாளம் கண்டுள்ளனர்.

சிறிது நேரத்தின் பின் தொழில் அதிபர் மயக்கம் தெளிந்த நிலையில் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு தொழில் அதிபரின் உறவினர் ஒருவர் பொலிஸரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை அழைத்துச் செல்பவரின் பெயர் விபரங்களை பொலிஸார் பதிவுசெய்துள்ள நிலையில் அவர் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

இதேவேளை குறித்த சம்பவ தகவலை வழங்கிய இளைஞனுக்கு கிளிநொச்சி பொலிஸ் தலைமைய பிரதான பரிசோதகர் பாராட்டு தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிடுள்ளார்.

You might also like