கிளிநொச்சியில் 69ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் 69ஆவது நாளாக தொடர்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் கடந்த மாதம் 20.02.2017 அன்று காலை ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like