யாழ். மானிப்பாயில் வாள் வெட்டு! ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் மானிப்பாய், கூழாவடியில் நேற்று இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கூழாவடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ரங்கராஜா செல்வகுமார் என்ற குடும்பஸ்தர் மீதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் வாள் வெட்டுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டை மேற்கொண்ட நபர்கள் தப்பிச்சென்ற நிலையில் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

You might also like