கிளிநொச்சியிலும் அம்பாறையிலும் த.தே.கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் இம் முறை மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மே 01 ஆம் திகதி தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் மிகப் பெரியளவில் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் நடைபெறவுள்ளன.

தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மிக விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் போன்ற விடயங்களை வலியுறுத்தி மே தினக் கூட்டம் நடைபெறும்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளோம் என்றும், தற்கால அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி, மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like