வவுனியா சாம்பல் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்தில் இன்று ( 29.04.2017) காலை 10.00மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கப்பாச்சி செட்டிக்குளத்தில் வசித்து வரும் சின்னச்சாமி விஜயகாந்தன் (வயது – 29) என்ற நபர் கிணறு வெட்டும் வேலைக்காக வவுனியா சாம்பல் தோட்டம் சென்று கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டார். வழமை போன்று இன்றும் (29.04.2017) கிணறு வெட்டும போது கிணறு வெட்டும் இயந்திரத்தில் ( கொம்பிறசர்) மின்சார கசிவு ஏற்ப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

You might also like