யாழில் அரளி விதை உட்கொண்டு இளம் குடும்பப் பெண் மரணம்

யாழில் அரளி விதை உட்கொண்டு ஆபத்தான நிலையிலிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சரசாலை தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த சசிதரன் பகிரதி எனும் 30 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு அரளி விதை உட்கொண்ட குறித்த பெண் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like