குழந்தையுடன் கங்கையில் குதித்த தாய்: குழந்தை சடலமாக மீட்பு

கம்பஹா வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது 6 மகனுடன் இன்று களனி கங்கையில் குதித்துள்ளார்.

கடுவலை பாலத்திற்கு மேல் இருந்து இந்த பெண் களனி கங்கையில் குதித்துள்ளார்.

எவ்வாறாயினும் அருகில் இருந்தவர்கள் பெண் காப்பாற்றியுள்ளனர். எனினும் பெண்ணின் மகன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை பியகம பொலிஸார் கைது செய்துள்ளனர். காணாமல் போன சிறுவனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் கடற்படையின் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

You might also like