மதில் சரிந்து விழுந்து 7 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே மரணம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் மதில் சரிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சென்ற வாரம் கட்டிய மதில் ஒன்று ஏழுவயது சிறுமி மீது உடைந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த சிறுமி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சிறுமியின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

You might also like