அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிக்கப்பட்ட விமானம்! வெளிநாட்டு பயணி மரணம்

வெளிநாடொன்றிலிருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் உயிரிழந்தள்ளார்.

சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பயணி சுகயீனம் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணிக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிர்மொயோ சமுல்யோ என்ற 75 வயதுடைய இந்தோனேஷிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

You might also like