500 பேரை கொண்ட மிகப் பெரிய குடும்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 500 பேர் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ரெயின் குடும்பத்தினர் தங்களின் உறவினர்களை ஒன்று சேர்க்க விரும்பினர்.

இதற்காக இவர்களின் தாத்தா, தாத்தாவின் தாத்தா வழியிலான 80 ஆண்டுகளுக்கு முந்தையிலான சொந்தங்களை அவர்களின் சொந்த ஊர்களில் தேட ஆரம்பித்தனர்.

https://youtu.be/kylytkQFrQo

தேடலின் முடிவில் இந்த குடும்பத்தை சேர்ந்த 500 பேரை கண்டறிந்து அவர்களை ஒன்றாக சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தனர்.

இந்த சொந்தங்கள் அனைவரும் மலைச்சரிவு ஒன்றின் கீழ் ஒன்றாக கூடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட குடும்ப ஒற்றுமையினை காட்டும் இந்த புகைப்படத்திற்கு பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

You might also like