ஆனந்த சங்கரியை கொலை செய்ய பொட்டம்மான் திட்டமிட்டாரா? ஆதாரத்தை வெளியிட்டார் சங்கரி

விடுதலைப் புலிகளால் தன்னை கொலை செய்வதற்கு ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார்.

2003ம் ஆண்டு தன்னை கொலை செய்ய விடுதலைப் புலிகளால் ஆட்கள் அனுப்பப்பட்டனர். எனினும் இதற்கு பிரபாகரனுக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மானினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

You might also like