வவுனியாவில் மூவருக்கு ரிஸாட் தலமையில் திருமணம் : சாட்சி கையெழுத்திட்டார் மயூரன்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் மூன்று பேருக்கு திருமணம் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது

வவுனியாவில் இன்று (30.04.2017) இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் செவையின் ஆரம்ப நிகழ்வுகள் காலை 10.00மணியளவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கபட்டது.

இதையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமாக ரிஸாட் பதியூதினினால் மூன்று பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக பதிவுத்திருமணத்தினை மேற்கொள்ளதிருந்த மூன்று பேருக்கே இன்று அமைச்சர் தலைமையில் திருமணம் இடம்பெற்றது.

சாட்சி கையெழுத்தினை அமைச்சர் ரிஸாட்டும், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனும் கையெழுத்திட்டு திருமணத்தினை செய்து வைத்துள்ளனர்.

 

You might also like