சற்று முன் வவுனியாவில் மாரடைப்பால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று 05.01.2017 காலை 9மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த  பாலசூரிய கருணரட்ன 52வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு  இன்று காலை 9மணியளவில்  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

தற்போது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

You might also like