மே தினப் பேரணிகளுக்கு 11 ஆயிரம் பேருந்துகள் பதிவு

மே தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளால் 11 ஆயிரம் பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் 4 ஆயிரம் பேருந்துகள் பதிவு செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான கண்காணிப்பு அதிகாரி சீ.எச்.ஆர்.டி சந்ரசிறி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆயிரத்து 432 பேருந்துகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆயிரத்து 537 பேருந்துகளையும், ஜே.வி.பி 209 பேருந்துகளையும் ஒன்றிணைந்த எதிர்கட்சி 22 பேருந்துகளையும் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மே தின பேரணிகளுக்காக சுமார் 7 ஆயிரம் தனியார் பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மே தினத்தை முன்னிட்டு சில மேலதிக புகையிரதங்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like