போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மஹபொல புலமைப் பரிசில் நிறுத்தம்?

பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசிலை இடைநிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹபொல புலமைப்பரிசிலை முழுமையாக நிறுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, போராட்டங்களில் பங்கேற்பதற்காக வகுப்புக்களை புறக்கணிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல புலமைப்பரிசிலை இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களில் பங்கேற்பதற்காக மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணிப்பதால், பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறுவதாகவும் குறிப்பிடப்பட்டுகின்றது.

You might also like