மருத்துவர் என்று கூறி பணம் வசூல் செய்த நபரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

சத்திர சிகிச்சை மருத்துவர் எனக் கூறி தம்புள்ளை நகரில் பணத்தை சேகரித்து வந்த ஒருவரை இளைஞர்கள் சிலர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிரதேசத்தில் வர்த்தகரான பெண்ணொருவரிடம் பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது பெண்ணுக்கு தெரிந்த இளைஞர்கள் சிலர் அந்த நபரை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like