வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா தவசிகுளத்தில் இன்று (01.05.2017) காலை 5.30மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரோருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியா தவசிகுளத்தில் வசித்துவரும் ஜோகராஜா பிரதிப் (வயது -25) என்ற இளைஞன் வாகன சாரதியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இன்று அதிகாலை 5.30மணியளவில் குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடிய சமயத்தில் வீட்டின் முன்புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் மரணத்திற்கான காரணம் என்ன? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like