வவுனியா வீரபுரத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மே தினம் ஆரம்பம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனயின் (ஈ.பி.ஆர்எல்எப்) மே தினம் வவுனியா வீரபுரம் பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

செட்டிகுளம், வீரபுரம் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி ஊர்வலம் வீரபுரம் பொது விளையாட்டு மைதானத்தை அடைந்து அங்கு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

பேரணியில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு, வீட்டுத் திட்டத்தை வழங்கு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

கட்சியின் மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராசா தலைமையில்  நடைபெறும் இந்நிகழ்வில் அக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், அக் கட்சியின் செயலாளரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராஜா, க.சர்வேஸ்வரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

You might also like