வவுனியாவில் சிறுவன் தற்கொலை முயற்சி : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

வவுனியா ஓமந்தையில் சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (01.05.2017) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

ஒமந்தை மாணிக்கவளவு , இலுப்பைக்குளம் கிராமத்தில் வசித்து வரும் ரூபன் கஜேந்திரன் (வயது 12) என்ற சிறுவன் இன்று காலை 8.30 மணியளவில் வீட்டில் அத்தை பேசியதனால் மனமுடைந்து  புல்லுக்கு அடிக்கும் கிருமி நாசினி மருந்தை பருகி மயக்கமுற்ற நிலையில் வீட்டில் கிடைந்ததை அவதானித்த உறவினர்கள் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தற்போது சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுவனின் தாயார் இவர்களை பிரிந்து சென்று 5 வருடங்கள் ஆகிய நிலையிலும்   தந்தையாருடனும் அப்பம்மாவுடனும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like