வவுனியாவில் 67ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தொடரும் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 67ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் அரசாங்கமோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும், தமக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

You might also like