மே தின ஊர்வலத்துக்காக கலந்துகொள்ளச் சென்ற பேருந்துகள் மீது கல்வீச்சு

மே தின ஊர்வலத்துக்காக மக்களை ஏற்றிச்சென்ற பேருந்துகள் மீது பல்வேறு பிரதேசங்களில் கல்வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்துகொள்வதற்காக சென்ற பேருந்து மீது, வரக்காபொல பிரதேசத்தில் வைத்து கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இன்னும் பல பிரதேசங்களிலும் பேருந்துகள் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like