புதுக்குடியிருப்பில் கொள்ளை! cctv கமராவில் சிக்கினார் திருடன்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்த யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குணசிங்கம் சிவநாதன் (வயது 42) என்பவர் வர்த்தக நிலையத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்டு தப்பியோடி விட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

தான் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டதாகவும் யுத்தகாலப் பகுதியில் முள்ளிவாய்க்காலில் மனைவி பிள்ளைகள் இறந்து விட்டனர். ஒருவேளை உணவுக்கே கஸ்டம் என்று கூறி குறித்த வர்த்தக நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இரண்டு மாத காலம் நேர்மையானவர் போல் பாசாங்கு செய்து குறித்த வர்த்தக நிலையத்திலேயே தங்கி வேலை செய்து வேலையில் ஈடுபட்டு நன்மதிப்பை பெற்றிருந்தார்.

இந் நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நாதன் என்று அழைக்கப்படும் குணசிங்கம் சிவநாதனின் அம்மா, அக்கா, மனைவி, இரண்டு பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் இருப்பதாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உறவினர்கள் யாருமே இல்லையெனக் கூறி வேலையில் சேர்ந்த குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் யாழ்ப்பாணம் சென்று உண்மை நிலையை அறிந்து கொண்டார்.

இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை அநாதரவாக விட்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் பல தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபட்டு புதுக்குடியிருப்புக்கு வந்திருக்கின்றார்.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தனது இரகசியங்களை தெரிந்து விட்டார் என்று ஏதோவகையில் தெரிந்து கொண்ட நாதன் 30.04.2017ம் திகதி நண்பகல் 2.27 மணிக்கு விற்பனைக்காசுகள் வைக்கப்பட்ட மேசையின் லாச்சியை உடைத்து ஒருதொகை பணத்தையும் காசோலைகளையும் திருடிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பித்துச் சென்ற நபர் தொடர்பான தகவல்களை தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படுமென வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கோரியுள்ளார்.

தொடர்புகளுக்கு 077-4988519

You might also like