மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மாணவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடை பிரதேசத்தில் மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மாணவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்லடி உப்போடை பிரதேசத்தில் மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த அதே பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை காத்தான்குடி பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

இம்மாணவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.ஐ.றிஸ்வி முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்திய போது குறித்த சந்தேக நபரான மாணவரை எதிர் வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கல்லடி உப்போடை பிரசேத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை குறித்த பிரதேசத்திலுள்ள 15வயதுடைய மாணவர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இது குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரணை செய்த காத்தான்குடி பொலிசார் குறித்த மாணவரை கைது செய்தனர்.

குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இந்த மாணவர்கள் இருவரும் பாடசாலையில் கல்வி கற்பவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

You might also like