ஜே.வி.பி. கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்று மக்களை தெளிவூட்டும் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

கிளிநொச்சி பொதுச்சந்தை உள்ளிட்ட கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் இன்று காலை 10.30 மணியளவில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னால் பா உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் இன்று குறித்த துண்டு பிரசுர வினியோகத்தில் ஈடுபட்டனர்.

கருத்து தெரிவித்த சந்திரசேகரன் குறிப்பிடுகையில்,

இன்று நல்லாட்சி என கூறிக்கோள்ளும் அரசு நாட்டில் உள்ள காணிகளை இந்தியாவிற்கும், சீனாவி்கும் விற்பனை செய்து வருவதாகவும், விற்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 99 வருட குத்தகை அடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட பலவற்றை விற்பதற்கு திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். குறித்த இடங்களை விற்பனை செய்யும் ரணிலோ, அல்லது வேறு யாருமோ உியிருடன் இருக்க மாட்டார்கள். ஆனால் எதமு சந்ததிகள் பாதிக்கப்பட புாகவதக தெரிவித்தார்.

இதே வேளை எதிர்கட்சி தலைவர் குறுித்த விடயம் தொடர்பில் மௌனம் காப்பது தொடர்பில் கேள்வி எழுப்பியபோது,

எதிர்கட்சி தலைவர் எதிர்கட்சி தலைவர் பதவியை காத்திரமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இவ்வாறு நாட்டைவிற்கும் செயற்பாட்டு தொடர்பில் மௌனம் காக்காது, எதிர்கட்சி தலைவர் பதவியை பயன்படுத்த வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறுிப்பிட்டார்.

You might also like