ரொக்கெற் விளையாட்டுக்கழகத்தின் சித்திரை புத்தாண்டு விழா ..!(படங்கள் இணைப்பு)
வவுனியா கோவில்குளம் ரொக்கெற் விளையாட்டுக்கழகத்தின் சித்திரை புத்தாண்டு விழா 01.05.2017 திங்கட்கிழமை கழகத்தின் தலைவர் திரு. வி.ஜோஎல் நிரோசன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன், கௌரவ அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), அவர்களும் சிறப்பு அதிதிகளாக கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு. T. பூலோகசிங்கம், ஓய்வு பெற்ற அதிபரும், கோவில்குளம் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவருமான திரு சி.வையாபுரிநாதன், கோவில்குளம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத் தலைவர் திரு ந. நிமலன் , உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு . து.ரவிச்சந்திரன்,கோவில்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் . திரு வி.விஸ்வலிங்கம் ஆகியோருடன் கிராம மக்கள், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன், மாணவர்களை மகிழ்விக்கும் குதுகல விளையாட்டுகளும், மைதான நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.