கொழும்பு நகரை வேவு பார்க்கும் அதிநவீன வசதிகளை கொண்ட வாகனம்!

கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக அதிநவீன வசதிகளை கொண்ட வாகனம் ஒன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட கமரா கட்டமைப்பை கொண்ட நவீன தொழில்நுட்பத்திலான பொலிஸ் வாகனம் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமரா கட்டமைப்பிற்கு மேலதிக விசேட கமரா கட்டமைப்பை கொண்ட இந்த வாகனம் நடமாடும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விசேட கமரா கட்டமைப்பின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அந்த இடங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் பல்வேறு கட்சிகள் மேதின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கொழும்பு நகருக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதற்காக இந்த விசேட வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் கண்டியில் நகரில் நடைபெற்று வருகிறது. அங்கும் இந்த விசேட வாகனம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

You might also like