மேதினக் கூட்டத்தில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஐ.தே.கட்சி!

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டத்தின் போது பெருமளவான ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது.

அது மட்டும் இன்றி பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like