வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலம் நல்லத்தண்ணி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லக்ஷபான பகுதியில் உள்ள வாழைமலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்று அதிகாலை குறித்த நபரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

எச்.டிம்.லலித் என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச் செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like