நாய்களிடம் சிக்கிய சிறுவனின் பரிதாப நிலை!

தெருவில் சென்ற நாய்கள் கூட்டம் ஒன்றிடம் சிக்கிய 6 வயதுடைய சிறுவன்படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பளை, போதலாப்பிட்டிய, பாத்திமா கார்டன் பகுதியை சேர்ந்த மொஹமட் உஸ்மான்என்ற சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

நாய்களிடம் கடி வாங்கிய அந்த சிறுவனின் உடலில் கிட்டத்தட்ட 40 காயங்கள்உள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் வீதியில் தனியாக சென்று கொண்டிருந்த போது நாய்கள் கூட்டம்ஒன்று அவ்விடத்திற்கு வந்து அவரை தாக்கியுள்ளது.

இந்த நிலையில் படு காயமடைந்த சிறுவனை அந்த வழியில் சென்ற ஆசிரியர் ஒருவர்காப்பாற்றியுள்ளர்.

தலையில் ஒரு பகுதி காலில் ஒரு பகுதியை கடித்து எடுத்துள்ள இந்த நாய்கள்,சிறுவன் சுயநினைவை இழக்கும் வகையில் கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like