எச்சரிக்கையை மீறியதால் ஏற்பட்ட அனர்த்தம்: கடலில் சடலமாக மிதந்த யுவதி

கடலில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட யுவதியின் சடலம் கடலில் மிதந்து கொண்டிருந்த போது மீனவரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் குறித்த யுவதி நேற்று மாலை 5.10 அளவில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிலாபம், இளிப்பதெனிய, முங்கன்தளுவ மேற்கு பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உறவினர்களுடன் கடற்கரைக்கு வந்து விளையாடி கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

கடலில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த 4 பெண்கள் திடீரென வந்த பாரிய அலையினால், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் கடலில் மிதந்து கொண்டிருந்த போது யுவதியின் சடலத்தை மீனவர் மீட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடம் அபாயமானது என சிலாபம் நகர சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன எச்சரிக்கை பலகைகளை காட்சிக்கு வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like