28.05 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் மத்திய நிலையம்

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 28.05 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஆசிரிய மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபொற்றுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் மாகானக் கல்வி அமைச்சினால் கிளிநொச்சி கல்வி வலயத்திற்றகான ஆசிரிய மத்திய நிலையம் 28.05 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05-01-2017)பகல் 12. 05மணிக்கு நடைபெற்றுள்ளது.

இதில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க. முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்
நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வியலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

You might also like