தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வயோதிப பெண்!

காலி – இமதுவ ஹெல்லகொடை பிரதேசத்தில் வயோதிப பெணணொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் நேற்று தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றிய பின்னர் உடலில் தீ மூட்டிக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இமதுவ ஹெல்லகொடை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான பெண்மணியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

You might also like