42வது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் இன்றும் 42 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன கிடைக்கப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இது வரை காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம்.இனியும் வாழ முடியாது. எனவே, தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள்.

தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

You might also like