கதவு விழுந்ததில் 8 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்
மணலாறு (வெலிஓய) கிணற்றுக்குளம் (லிந்தவெவ) தெற்கு பிரதேசத்தில் வீட்டின் கதவு 8 மாத ஆண் குழந்தையின் மீது விழுந்ததில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாக மணலாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிஸ்க தெனுவன் கருணாசேன என்ற 8 மாத ஆண் குழந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.
குழந்தை வீட்டில் இருந்த நேரத்தில் தந்தை அருகில் உள்ள குளத்திற்கு சென்றிருந்ததுடன் தாய் வீட்டு முற்றத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கதவு உரிய முறையில் பொருத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் காற்று வீசிய போது கதவு காற்றில் உந்தப்பட்டு குழந்தை மீது விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.