இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலய சட்ட அதிகாரி இத்தாலி நோக்கி பயணம்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலய சட்ட அதிகாரி சட்டத்தரணி ஆர். எல். வசந்தராஜா எதிர்வரும் (06.05.2017) அன்று இத்தாலியின் சன்றிமோ (sanremo) நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான கற்கை நிலையத்தில் புலமைபரிசில் பெற்று செல்லவுள்ளார்.

ஒரு மாத காலம் இடம்பெறவுள்ள பயிற்சி நெறியில் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான விஷேட பயிற்சி நெறியினை கற்றுகொள்ளவே அவர் செல்கின்றார்.

மேலும் இவர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை சார்ந்த பயிற்சி பட்டறைகள், இராணுவத்திற்கான மனித உரிமை பயிற்சிகள், பொலிசாரிற்கான மனித உரிமை பயிற்சிகள் போன்றவற்றை கடந்த காலங்களில் வன்னி பிராந்தியத்தில் மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதும் இப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்

You might also like