கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது முற்ப
இந்த நிலையில் பிற்கபல் கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளா் க. கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தாா். அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு. இராணுவம் இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள் அமைத்து இருந்த போது உங்களுடைய பிரதேச சபையும் சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பியதோடு தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனா். அரசியல் அழுத்தம் காரணமாகவே பொது நனைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான கு. பிரபாகரன் (எழிலன்) தெரிவித்தாா்.
இதனை தொடா்ந்து கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சா் . கிளிநொச்சி பொலீஸாா் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்று பொது நினைவு சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனா். கிளிநொச்சியிலிருந்து 119 தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து மாவீரா் துயிலுமில்லம் காணியில் சட்டவிரோத பணிகள் இடம்பெறுகிறது என முறைப்பாடு செய்தமையினை தொடா்நது தாம் இங்கு வருகைதந்தாகவும். இன்று வியாழன் நான்கு மணிக்கு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு சமூகளிக்குமாறு அங்கு பிரதேச சபை செயலாளா், பிரதேச செயலாளா் உள்ளிட்ட பலரை அழைத்து பேசி தீர்வுக்கு வருவோம் எனக் கூறி சமாதி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனா்.