முள்ளிக்குளம் கடற்படையினரிடமிருந்த படகு மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் உரியவரிடம் ஒப்படைப்பு

கடந்த 2016.10.24 அன்று  கடற்படையினரால் முள்ளிக்குளம் கடற்பரப்பில் வைத்து மீனவரின் படகு ஒன்றினை கடற்படையினர் சட்டவிரோதமான மீன்பிடி தொழில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து கைது செய்து மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

மீன்பிடி திணைக்களத்திடமிருந்து படகை விடுவிக்குமாறு கோரியிருந்தனர். கடற்படையினரிடமும் சென்று பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படடிருந்தது. எனினும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் 2016.10.24 அன்று மேற்கொண்ட முறைப்பாட்டில் சம்பவம 2015.12.28 அன்று இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முள்ளிக்குளம் கடற்படைத்தளத்திற்குச் சென்று மனித உரிமைகள் ஆணைக்குழு, மீன்பிடி திணைக்களப்பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் முள்ளிக்களம் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் வன்னிப்பிராந்திய பொறுப்பதிகாரி எம். ஆர். பிரியதர்சன தெரிவித்தார்.

You might also like