தமிழக தொழிலாளருக்கு இலங்கையில் 60 ஆயிரம் ரூபா சம்பளம்

இலங்கையில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டு 60, 000 ஆயிரம் ரூபா (25 ஆயிரத்து 253 இந்திய ரூபா) சம்பளம் வழங்கப்படுவதாக தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சண்டே ரைம்ஸ் நாளிதழ் குழுவொன்று, இலங்கையில் பணியாற்றும் தமிழக பணியாளர் குழுவொன்றை சந்தித்தபோது, அவர்களால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அடங்கலாக வாரத்தில் ஏழு நாட்களும் தாம் பணியாற்றுவதாகவும், எந்தவொரு விடுமுறையும் இல்லை என்றும் தமிழக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணிவரை 12 மணி நேரம் பணியாற்றுவதாக குறித்த பணியிடத்தில் பணியாற்றும் தமிழக பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எமது பணி முடிந்தவுடன், எமக்குத் தேவையான உணவுகளை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால், உழைக்கின்ற பணம் உணவுக்கே செலவாகிவிடும். இலங்கையில் உணவு விலை அதிகம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையர்களுடன் பணியாற்றும்போது, தொடர்பாடல் பிரச்சினையை தாம் எதிர்கொள்வதாகவும் தமிழக தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

You might also like