மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகள்

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு தேவையான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், காற்று சீராக்கி இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான புதிய சுற்றுநிரூபம் கொண்டுவரப்படும்.

மின்சாரத்தை சேமிக்கும் மூலோபாயமாக இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சூரிய எரி சக்தி பெற்றுக்கொடுப்பதற்கான புதிய சுற்றுநிரூபமும் கொண்டுவரப்படவுள்ளது.

சூரிய எரிசக்தியை பெற்றுக்கொள்வதற்கு 40 சுற்றளவு அடிக்கு மேற்பட்ட கூரையைக்கொண்ட வீடொன்றே தேவையென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like