உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு! 279 பேரின் பெறுபேறுகளில் மாற்றம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனையில் 279 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மீள் பரிசீலனை செய்வதற்காக 58504 பேர் விண்ணப்பத்திருந்தனர்.

இவ்வாறு மீள் பரிசீலனைக்காக விண்ணபபம் செய்தவர்களில் 279 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மீள்பரிசீலனையின் பின்னரான பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk, www.results.exams.gov.lk என்ற இணைய முகவரிகளின் ஊடாக பார்வையிட முடியும்.

மேலும் பாடசாலை பரீட்சார்த்திகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தபால் மூலம் அவர்களது முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 011-2785230 மற்றும் 1911 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

You might also like