69ஆவது நாளாகவும் வவுனியாவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 69ஆவது நாளாவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் மற்றும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றுடன் 69ஆவது நாளாகவும் வீதியோரத்தில் இருக்கின்றோம். இதுவரை அரசாங்கம் எந்த ஒரு பதிலையும் தராது கண்டுகொள்ளாதது  போல் இருப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை இந்த போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like