மூன்றாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, பூநகரியின் இரணைதீவு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும், அங்கு தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு கோரி இரணைதீவு மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கிராம மட்டத்திலும் பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் தமது பூர்வீக நிலத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு இந்த மக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தீர்வு தருமாறு கோரி போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை மே நாளன்று இரணைதீவு மக்கள் இரணைமாதா நகரில் தமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி உண்ணாவிரதப் போராட்டமாக தொடர்ந்திருந்தனர்.

அந்த வகையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like