43ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

தீர்வின்றிய நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று 43ஆவது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த போராட்டம் பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் காணி உரிமையாளர் தாமாக முன்வந்து காணியினை வழங்கும் போது தான் இதற்கான தீர்வைப் பெறமுடியும் என பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச அதிகாரிகள் என்ற வகையில் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு எதனையும் எடுக்க முடியாதுள்ளது எனினும் காணி உரிமையாளருடன் பேசி ஒரு சுமூகமான முடிவை பெற வேண்டிய நிலை காணப்படுவதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like