வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் உறவுகளுக்கு ஆதரவாக மன்னார் பொது அமைப்புக்கள்

வவுனியாவில் கடந்த 69ஆவது நாளாக காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்று (03.05.2017) மாலை 3.00மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற மன்னார் மாவட்ட காணாமற்போன உறவுகளின் சங்கம், மன்னார் மாவட்ட பெண்கள் சமாசம், மன்னார் மாவட்ட மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் படையினரிடம் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரியும், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும், அவசரகாலச்சட்டத்தினை இரத்துச் செயக்கோரியும் சுழற்சி முறையில் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like