தமிழர் தாயகத்தை துண்டு போட்டால் போர் வெடிக்கும்: கிளிநொச்சியில் எச்சரிக்கை

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக இடங்களை துண்டுப்போடுவதற்கு வாக்களிக்க கூடாது. அவ்வாறு வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துண்டு பிரசுரங்கள் கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் தலைமைகளை எச்சரித்து இந்த துண்டுபிர்சுரம் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை நேற்று மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டியிருந்தனர்.

எனினும், மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறை அமைக்கும் பணிகள் பொலிஸாரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த துண்டுபிரசுரம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளமையினால் அங்கு ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You might also like