பச்சிலைப்பள்ளி பேராலையில் நடைபெற்ற உத்தியோகத்தர்களுக்கான சித்திரை புத்தாண்டு விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பேராலை எனும் கிராமத்தில் மாவட்ட அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் 29.04.2017 அன்று சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலகங்களும் இணைந்து உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள், கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 600க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.

You might also like