நெடுங்கேணி எரிபொருள் நிலையத்தில் இரண்டு நாளாக பெற்றோல், மண்ணெண்ணெய் இல்லை

நெடுங்கேணி எரிபொருள் நிலையத்தில் 02.05.2017 அன்றில்இருந்து பெற்றோழும் மண்ணெண்ணெயும் இல்லாத நிலையில் விவசாயிகளும் வாகன சாரததிகளும் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் நெடுங்கேணி பகுதிகளில் தனியார் விற்பனை நிலையங்களில் கூட பெற்றோல் மண்ணெண்ணெய் இல்லை.

இதனால் வேறு பிரதேசங்களுக்கு பெற்றோல் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதோடு ஒரு மாதகாலத்திற்குள் இரண்டு தடவைக்கு மேல் இவ் எரிபொருள் நிலையத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் இல்லாத நிலை ஏற்பட்டுவருகின்றது.

இப் பிரதேசத்திலிருக்கின்ற அனைத்து மக்களும் விவசாயத்தையே கருத்திற் கொண்டு வாழ்கின்றனர். தற்போது தொடர்ச்சியான வறட்சி காரணமாக தொடர்ச்சியான நீரினை விவசாய செய்கைக்கு வழங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே இந்த எரிபொருள் நிலையத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் கிடைக்கக்கூடியமாதி ஏற்படு செய்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like