முல்லைத்தீவு மாங்குளத்தில் கேரள கஞ்சாவுடன் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாங்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நேற்று(05) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

மாங்குள பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்துபுர பகுதியில் வீடு ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது.

இதன் போது குறித்த வீட்டில் இருந்து 5.6 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மாங்குள குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரனைகளை மேற்கொண்டுள்ள மாங்குளம் பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like