5ம் திகதி (வெள்ளிக் கிழமை) மூடப்படும் வடக்கு மாகாண வைத்தியசாலைகள்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் செயற்பாட்டை எதிர்த்து மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வட மாகாண வைத்தியர்களும் இணையவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக் கிழமை மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் செயற்பாட்டை எதிர்த்து பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இப் போராட்டத்தில் வட மாகாண வைத்தியர்களும் இணையவுள்ளனர் .

எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

“இது இலங்கை மருத்துவ சேவையின் தராதரம் பற்றிய போராட்டம், நீண்ட காலமாகத் அரசாங்கம் இப் பிரச்சினைக்கு தீர்வு காணாது உள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், மற்றும் சுகாதார சேவைகளில் உள்ள அனைத்து சங்கத்தினர் மற்றும் ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தினர், மருத்துவ மாணவர்கள் சங்கம், உட்பட பல சங்கத்தினர் இணைந்து பொது வேலை நிறுத்தத்தில் 5ம் திகதி காலை 8மணி முதல் 24 மணி நேர போராட்டத்தில் ஈடுபடுவர் எனத் தெரிவித்தார்

You might also like