வவுனியா சிதம்பரபுரத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் தப்பி ஓட்டம் : கஞ்சா மீட்பு

வவுனியா சிதம்பரபுரத்தில் நேற்று (03.05.2017) மதியம் 12.00மணியளவில் கஞ்சா வைத்திருந்த சந்தேச நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட சமயத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரத்தில் நேற்று (03.05.2017) பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை திறத்த முற்பட்ட சமயத்தில் சந்தேக நபர் கஞ்சா பையை கீழே வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

சிதம்பரபுரம்- கற்குளத்தில் வசித்து வரும் துரை ( வயது – 34) இவரை பொலிஸார் தேடிவருவதுடன் இவரிடமிருந்து 1கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

You might also like